பா.ஜ.,வில் இருந்து விலகல்: ஷெசாத் பூனாவாலா அறிவிப்பு
புதுடில்லி: பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, 38, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.
வழக்கறிஞரான ஷெசாத் பூனாவாலா, காங்கிரசில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். 2017ல், காங்., தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தலில், ராகுலுக்கு சாதகமான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன என, குற்றஞ்சாட்டினார். அதன்பின், காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், 'டிவி' விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜ.,வின் முகமாக மாறினார்.
கடந்த மாதம், 30ம் தேதியே பா.ஜ.,வில் இருந்து ஷெசாத் பூனாவாலா விலகினார். எனினும், முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கோரினார்.
இந்நிலையில், இரு வார பரிசீலனைக்கு பின், பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ஷெசாத் பூனாவாலா அறிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
குடும்பத்தில் நிலவும் நிதி நெருக்கடியால், தனியார் துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். எனவே, பா.ஜ.,வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். பிரதமர் மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். கட்சியில் இருந்து மட்டுமே விலகி இருக்கிறேன். கொள்கையில் இருந்து விலகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்