திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த கோரிக்கை
திருப்போரூர், ஆக. 18–
திருப்போரூர் கிளை நுாலகத்தை முழுநேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அருகே 1959ல் தொடங்கப்பட்ட கிளை நுாலகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில், மாணவர்கள், பொதுமக்கள் என தினமும், 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்த கிளை நுாலகம் காலை, 9:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை, மாலை, 4:00 முதல் இரவு, 7:00 மணி வரை இயங்குகிறது.
திருப்போரூர் தாலுவாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளாகியும், இந்த நுாலகம் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. பகுதி நேரத்தில் செயல்படுவதால், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ – மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். குறைந்த அளவே புத்தகங்களும் உள்ளன. பத்து ஆண்டுகளாக புதிதாக மாற்றப்படவில்லை. வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:திருப்போரூர் கிளை நூலகத்தை தரம் உயர்த்தினால், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.
கூடுதலாக நுாலகர்கள் நியமிக்கப்படுவர். மேலும், செய்தித்தாள், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். போட்டி தேர்வுக்காக தயராகி வரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கும், சிறந்த படபை்பாளிகளை உருவாக்கும் இடமாக இந்த நுாலம் மாற்றம் அடையும். எனவே, திருப்போரூர் கிளை நுாலகத்தை முழுநேர நுாலகமாக இயங்கும் படி தரம் உயர்த்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்