தவெகவின் 100 நாள் ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை: சொல்கிறார் இபிஎஸ்
சென்னை: தவெகவின் 100 நாள் ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறி உள்ளார்.
சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி;
100 நாள் தவெக ஆட்சியில் எந்தவொரு, பெரிய, புதிய திட்டமும் கொண்டு வரவில்லை. அறிவிக்கவும் இல்லை.
அதோடு, 2026 சட்டசபை தேர்தலின் போது தவெக சார்பில் பல அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே நிதிநிலை அறிக்கையிலும் வெளிப்படுத்தவில்லை.
இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம், அதுவும் நடக்கவில்லை, அறிவிக்கவில்லை. ஆக, தமிழக மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தது தான் இந்த ஆட்சியின் சாதனை.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement