அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சிவகங்கை,ஆக.18-
சிவகங்கை மேலமருங்கூர் அருகே பிடிகுளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 50. இவர் அரசு போக்குவரத்து கழக சிவகங்கை கிளையில் கண்டக்டராக பணிபுரிகிறார். ஓரியூரில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்சில் மதியம் 1:40 மணிக்கு பணியில் இருந்தார். அந்த பஸ் கொல்லங்குடி அருகே செல்லும் போது கொல்லங்குடி பஸ் ஸ்டாப்பில் காசி மகன் கணேசன் 45 குடும்பத்தோடு பஸ்சில் ஏறியுள்ளார். கணேசன் மட்டும் படிக்கட்டில் நின்றுள்ளார். கண்டக்டர் அவரை உள்ளே வருமாறு கூறியுள்ளார். அதற்கு கணேசன் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பஸ்சை நாட்டரசன்கோட்டை அருகே உள்ள சாத்தனி விலக்கில் நிறுத்தி கணேசனை கண்டக்டர் இறக்கிவிட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த கணேசன் கல்லால் அரசு பஸ்சின் பின் கண்ணாடியை உடைத்துள்ளார். கண்டக்டர் கண்ணன் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
-
திருட்டு கார்களுக்கு போலி ஆவணங்கள்: கேரள ஆசாமி 16 ஆண்டுகளுக்கு பின் கைது
-
ஆளில்லாத வீட்டில் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம்: ஒருவர் கைது
-
மா. கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
-
பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்