கண்களில் ரிப்பன் கட்டி  இடைநிலை ஆசிரியர்கள் மனு 

கடலுார்: புதிய அரசாணை மூலமாக பணி நியமனம் வழங்க வேண்டுமென, இடைநிலை ஆசிரியர்கள் மனு அளித்தனர். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு அளிக்க வந்தனர். அவர்களில் சிலர் கண்களில் ரிப்பன் கட்டியிருந்தனர். சிறிது நேரம் கழித்து ரிப்பனை அகற்றினர். பின், அனைவரும், அதிகாரிகளிடம் அளித்த மனு: 

 கடந்த 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் பல முறை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோம். ஆனால், இதுவரை பணி நியமனம் நடக்கவில்லை.  இந்நிலையில், 2024ல் நடந்த நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 21,515 ஆகும். எனவே, இவர்களுக்கு புதிய அரசாணை மூலமாக தொடக்கப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement