அடிக்கடி சேதமாகும் குழாய்: மாற்றியமைக்க வலியுறுத்தல்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், குப்பாம்பட்டி ஜம்ப்தொட்டியில் இருந்து ஏத்தக்கோவில் வரை செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி சேதம் அடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கிறது.

பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் ஆற்றில் பம்பு செய்யப்படும் நீர் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்கிறது. இத்திட்டத்தில் குப்பாம்பட்டி அருகே ஜம்ப் தொட்டி அமைத்து அதில் சேகரிக்கப்படும் நீரை பம்பு செய்து கோத்தலூத்து, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, பாலக்கோம்பை ஊராட்சிகளுக்குட்பட்ட பல கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் குப்பாம்பட்டி ஜம்ப் முதல் ஏத்தக்கோவில் வரை 3 கி.மீ. தூரத்தில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாகிறது. ஒருமுறை குழாய் சேதம் அடையும் போது அதனை சரி செய்தபின் வினியோகம் சீராக பல நாட்கள் ஆகிகிறது. இப் பகுதியில் புதிய பைப் லைன் அமைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement