பால்குடம் ஊர்வலம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுதத பெரியசெவலை துர்க்கை காளியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:00 மணியளவில் கோவிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று துர்க்கை காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement