மொபட் மீது டிராக்டர் மோதி காய்கறி கடைக்காரர் பலி
விழுப்புரம்: மொபட் மீது டிராக்டர் டிப்பர் மோதிய விபத்தில் காய்கறி கடை உரிமையாளர் இறந்தார்.
விழுப்புரம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 77; காய்கறி கடை உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் தனது மொபட்டில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சென்றார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு எம்.ஆர்.ஐ.சி., பள்ளி அருகே சென்றபோது, மொபட் மீது அவ்வழியே வந்த டிராக்டர் டிப்பர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ்கள் மோதி விபத்து தப்பிய பயணியர்
-
பா.ஜ.,வில் இருந்து விலகல் ஷெசாத் பூனாவாலா அறிவிப்பு
-
பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீசார்
-
திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த கோரிக்கை
-
தவெகவின் 100 நாள் ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை: சொல்கிறார் இபிஎஸ்
-
கண்களில் ரிப்பன் கட்டி இடைநிலை ஆசிரியர்கள் மனு
Advertisement
Advertisement