திருவிழாவில் தகராறு 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம்: கோவில் திருவிழாவில் ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் காசிநாதன், 52; இவர் அப்பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழா சுவாமி ஊர்வலத்தில் நின்றிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், மேகநாதன், மோகன், செல்வகணபதி ஆகியோர் தகராறு செய்து காசிநாதனை திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், காணை போலீசார், பார்த்திபன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement