ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவரிடம் ஆன்லைன் வர்த்தகம் எனக்கூறி ரூ.19.97 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரியகுளத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அஷ்வின் 31. இவருக்கு 'ஸ்நாப் சாட்' சமூக வலைதளத்தில் சிநேகா, ஆதேஷ், கோவிந்த் கட்கரி அறிமுகம் ஆகினர். ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என அஷ்வினிடம் கூறினர். புதிதாக வங்கி கணக்கை துவங்க கூறினர். இதை நம்பிய அஷ்வின், ஜன., முதல் ஏப்., வரை பல தவணைகளாக ரூ.19.97 லட்சத்தை அனுப்பினார். லாபம் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. அஷ்வின் புகாரின் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement