ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இதன்மூலம் தமிழகத்திற்கு 1124 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

இந்நிலையில், 2வது அணு உலையை குளிர்விக்க கடல் நீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் நுழைந்தன.

இதனால் கோளாறு ஏற்பட்டதை அடுத்து 2வது அணு உலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பகல் வரை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜெல்லி மீன்கள் அகற்றப்பட்டு, கடல் நீர் செல்லும் குழாய் சீரமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

Advertisement