ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் நகை பறித்தவர் 2 ஆண்டுக்கு பின் கைது

ஈரோடு; கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சாந்தா பிரபாகரன், 74; எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் பாலக்காட்டில் இருந்து ம.பி., மாநிலம் சாட்னாவுக்கு, 2024 ஜூன் 9ல் ஏ.சி., கோச்சில் பயணித்தார்.


ரயிலில் இருந்து இறங்க தயாரானபோது ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த, 11.750 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனதை அறிந்தார். இதுகுறித்து சாட்னா ரயில்வே போலீசில் புகாரளித்த நிலையில், ஈரோடு ரயில்வே போலீசில், 2025 ஜூன் 4ல் வழக்குப்பதி-வானது.உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஹர்விந்தர் சிங், 42, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்-தனர். இதில் சாந்தாவிடம் நகை, பணம் திருடி-யதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம், 40 கிராம் தங்க கட்டிகளை மீட்ட போலீசார், ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2ல் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement