தீ வைத்து டூவீலர் எரிப்பு

அந்தியூர்; அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன், 45; டிரைவர். தனக்கு சொந்தமான யூனிகார்ன் பைக்கை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் தீ வைத்துள்ளனர்.

தீயில் பைக் எரிந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் சாமிநாதனை எழுப்பி தகவல் கூறினர். அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சாமிநாதன் புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement