நாம் அறிவியல் யுகத்தில் தான் வாழ்கிறோமா? மயான வசதி இல்லாமல் 3 நாளாக காத்திருந்த சடலம் 'இறப்பு வந்தாலே இன்னல்'

ஈரோடு; பெருந்துறை தாலுகா சிங்காநல்லுார் கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: சிங்காநல்லுார் கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம்.

நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுக்கு என தனியாக மயான வசதி இல்லாததால், இறப்பு நடக்கும்போதே சிரமத்தை சந்திக்கிறோம். பிற நபர்களின் மயானங்களை பயன்படுத்த முடியவில்லை. எங்கள் ஊரை சேர்ந்த ஒரு பெண் இறந்தபோது, அடக்கம் செய்ய மூன்று நாட்கள் தாமதமானது. எங்கள் பகுதி மக்களுக்காக தனி மயான இடம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement