நலவாரியம் அமைக்க எழுத்தாளர்கள் ஆவல்
ஈரோடு; ஈரோடு மாவட்ட எழுத்தாளர் சங்க அறிமுக விழா, கலந்தாய்வு கூட்டம் வரலாற்று ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. பொன்னு-சாமி வரவேற்றார். ரவிச்சந்திரன், மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசு, எழுத்தாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., - பல்-கலை கழகம் போன்ற அரசு நிறுவனங்களில் வாரிய குழு நியமன உறுப்பினர்களாகவும், பல்-கலை கழக ஆட்சி மன்ற நியமன உறுப்பினர்க-ளாக நியமிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநுால் கழகம், நுாலக ஆணைக்குழுவில் எழுத்தாளர்-களை வாரிய தலைவராக்கலாம். நலிவுற்ற மற்றும், 60 வயது நிரம்பிய எழுத்தாளர்களுக்கு அரசு, சிறப்பு உதவித்தொகையாக மாதம், 10,000 ரூபாய் வழங்க வேண்டும். பத்திரிகையாளர்களை போல எழுத்தாளர்களுக்கும் அரசு விபத்து காப்பீடு தொகையாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு வழங்குவது போல, எழுதத்தாளர்களுக்கும் இலவச வீட்டு-மனை பட்டா, வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.