யானைக்காட்டில் 'திக்திக்' பயணம் கடம்பூர் மலை கிராம மக்கள் குமுறல்
ஈரோடு; சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலையை சேர்ந்த கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவ-லகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
சத்தியமங்கலம் தாலுகா கரளையம் பஞ்.,க்கு உட்பட்ட காடாநல்லி, நகலுார், உகினியம், பதிரி-காடு போன்ற மலை கிராமங்கள் மிகவும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன.இங்கு யானை அதிகமாக நடமாடுவதால் யானைக்காடு என்பார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து காடநல்லிக்கு தினமும் காலை, 5:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை 5:30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் நகலுார் மலை கிராமத்துக்கு வராமல், 2 கி.மீ.,க்கு அப்பால் பயணிகளை இறக்-கிவிட்டு செல்லும். அங்கிருந்து நகலுாருக்கு சாலை வசதி உள்ளது. ஆனால், அடர்ந்த வனப்ப-குதி, யானைகள் நடமாட்டத்தால் நடந்து செல்ல முடியாது.
இக்கிராமத்தில், 145க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கிறோம். பள்ளி செல்லும் குழந்-தைகள், வேலைக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 2 கி.மீ., துாரம் யானைக்-காடு வழியாக வந்து பஸ் ஏறி செல்லும் அவல நிலையில் உள்ளதால், நகலுார் கிராமத்துக்கே பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.