2 நாட்களாக உயரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

1


சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,220 ரூபாய்க்கும், சவரன், 1,13,760 ரூபாய்க்கும் விற்பனையானது.

வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின.

நேற்று (ஆகஸ்ட் 17), தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement