பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு


நமது நிருபர்




பிலிப்பைன்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஜாம்போங்கா பல்கலைக்கழக உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவர் ஒருவர் சக மாணவர்களைக் குறிவைத்துச் சுட்டார். இந்த சம்பவத்தில் ஒரு மாணவரும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்தார்.

மேலும் மாணவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட நடத்திய நபர் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்; சக மாணவர் உடன் இருந்து வந்த பிரச்னை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement