தொடர்ச்சியாக 30 மணி நேரம் வானில் பறக்கும் தாக்குதல் ட்ரோன்கள்; குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
-நமது நிருபர்-
கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு பார்த்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், நவீன சென்சார்கள் மற்றும் பல திறன் கொண்ட கருவிகள் மூலம் கடல் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை 30 மாத காலத்திற்கு குத்தகைக்கு எடுப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ரூ.1943 கோடியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள் இந்தியக் கடற்படையின் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு என்ன?
* MQ-9B Sea Guardian ட்ரோன்கள், நீண்ட நேரம் வானில் பறந்து உளவு பார்த்தல் மற்றும் துல்லியமாகத் தாக்கும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறக்கக்கூடியது, 40,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இயங்கக்கூடியது; பரந்த கடல் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்காணிக்கக்கூடியது.
* 450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.
* தரைப்பகுதியைத் தாக்குதல் மற்றும் உளவு பார்த்தல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த ட்ரோன்களை குத்தகைக்கு எடுப்பது கடற்படைக்குக் கூடுதல் உயர்தரக் கண்காணிப்புத் திறனை வழங்குகிறது.
* தொடர்ச்சியான கண்காணிப்பு, பரந்த கடல்சார் பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் கடற்படைக்கு உதவும்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு சீ கார்டியன் ட்ரோன்களை கடற்படை இயக்கி வருகிறது.
ராணுவ ரகசியம்
குத்தகைக்கு இவ்வளவு கோடியா? அது சரி நாட்டில் நிலவும் கடத்தல் , ஊடுருவல் , இவைகளிலெல்லாம் உள்ளூர் அ. வியாதிகளின் கைவண்ணம் உள்ளதே? இதையெல்லாம் இந்த ட்ரோன்கள் காட்டி கொடுக்குமா?
இல்லையென்றால் இத்தனை 1943 கோடியும் வேஸ்ட்.
coonoor guy also ...
எல்லைகளை பாதுகாக்க வேண்டும். நாமும் உள்நாட்டில் இது மாதிரி ட்ரோன் உற்பத்தி செய்ய வேண்டும்.மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு