பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, திரு.வி.க., நகரில், கடந்த, 2010--11ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டனர்.

இந்நிலையில், ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த சிறுவர் பூங்கா, முறையாக பராமரிக்கப்படாததால் அதிலிருந்த ஊஞ்சல் உள்-ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்-துள்ளன. இதனால், சிறுவர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, விளையாட்டு உபகரணங்களை சீர-மைத்து, சிறுவர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement