பூட்டி கிடக்கும் சுத்திகரிப்பு நிலையம் குடிநீருக்கு தவிக்கும் பயணிகள்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டிலி-ருந்து, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ண-கிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு, 180க்கும் மேற்-பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமும், ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். கடந்த, 2024 அக்., 24ல், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்ட் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியில், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இதில் முறையாக குடிநீர் வருவதில்லை. மேலும், குடிநீர் குழாய்கள் பராமரிக்கப்படாததுடன், அதன் அருகிலேயே திறந்த வெளியில் சிறுநீர் கழிப்-பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் கிடைக்காததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடை-களில் குடிநீர் பாட்டிலை விலைக்கு வாங்கி சிர-மப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, 2025-26 தர்மபுரி, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அரூர் பஸ் ஸ்டாண்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ., இயந்திரம் அமைக்கப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில், சுத்திகரிக்கப்-பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்படாமல், பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. அதை பயன்-பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நட-வடிக்கை எடுக்க, பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement