பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு தர்ம அடி
கோட்டக்குப்பம்: கோட்டகுப்பம் அருகே ஓட்டலுக்கு வழிகாட்டிய பெண்ணை வாயை மூடி பாலியல் பலாத்காரம் முயற்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸ் ஒப்படைத்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி முடித்து பொம்மையார்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த, 46 வயது மதிக்கத்தக்க பெண் அருகே உள்ள வீட்டுக்கு, இ.சி.ஆர்., சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது திடீரென பின்னால் வந்த வாலிபர், அந்த பெண்ணிடம், 'இந்த பகுதியில் சாப்பிட ஓட்டல் இங்கே இருக்கிறதா' என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் நள்ளிரவு ஓட்டல் இருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். அப்போது, திடீரென அந்த வாலிபர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த பாலகுமாரன் என்பது தெரிய வந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு மாதத்திற்கு பின் திறப்பு
-
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் சீமை கருவேல மரங்கள் ஏலம் ரத்து
-
சர்வதேச மனித உரிமைகள் அறக்கட்டளை தலைமை இயக்குநராக கிருஷ்ணன் தேர்வு
-
கிளினிக்கின் பூட்டை உடைத்து ரூ.25,000 திருட்டு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
பழங்குடியினருக்கான வீடுகளில் கழிப்பறையே கட்டப்படவில்லை