வேன் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அவலுார்பேட்டை: வேன் மோதி ஆட்டோ டிரைவர் இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த நொச்சலுார் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் காசி, 33; ஆட்டோ டிரைவர். 

இவர் நேற்று மதியம் 1:30 மணிக்கு மேல்மலையனுாரிலிருந்து ஆட்டோ ஓட்டி  சென்று  கொண்டிருந்தார்.  அப்போது கோ.மோட்டூர் கூட்ரோடு அருகே  எதிரே வந்த மினிவேன் எதிர்பாராமல் ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் காசி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி வெண்ணிலா, 30; புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement