மத்திய அமைச்சர் நட்டாவுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை!
புதுடில்லி: மத்திய அமைச்சர் நட்டாவுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் ஜேபி நட்டா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நட்டாவுக்கு டாக்டர்கள் குழு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ''உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் நட்டாவுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நலத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement