மாவட்ட பெண்கள் கபடி போட்டி: உடுமலை அணி மூன்றாம் இடம்

உடுமலை: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம், ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாவட்ட ஆண்கள், பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில், 15ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. பெண்கள் பிரிவில், 27 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் 20-16 என்ற புள்ளிக்கணக்கில் 'வி ஸ்போர்ட்ஸ்' அணியை வென்றது. உடுமலை வி.ஆர்.டி. அணி 3ம் இடமும், 15 வேலம்பாளையம் இளம்சிட்டுகள் அணி 4ம் இடமும் பெற்றன.

ஆண்கள் பிரிவில், 70 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை எம்.எல்.ஏ., பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடமும், ஜோகோ ஸ்போர்ட்ஸ் கிளப் 2ம் இடமும், ஜி.சி.எம். கபடி குழு 3ம் இடமும், தளவாய்ப்பட்டினம் தமிழன் கபடி குழு 4ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

Advertisement