இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதிக் குழு மக்கள் சந்திப்பு: நடை பயண பிரசாரம்
பாகூர்: ஏம்பலம் தொகுதிக கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி, இந்திய கம்யூ., மக்கள் சந்திப்பு நடை பயண பிரசாரம் நடந்தது.
ஏம்பலம் டி.வி. நகர் சந்திப்பில் இருந்து துவங்கிய பிரசாரத்திற்கு, ஏம்பலம் தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் எழிலன் நோக்கவுரையாற்றி நடை பயணத்தை துவங்கி வைத்தார். செம்பியப்பாளையம், புதுக்குப்பம், கோர்க்காடு, தனிக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், அரங்கனுார் , சேலியமேடு, கிருமாம்பாக்கம், மகாத்மா காந்தி சந்திப்பு, சார்காசிமேடு, பின்னாச்சிகுப்பம், ஆதிங்கப்பட்டு வழியாக சென்ற பிரசார நடை பயணம் குடியிருப்புபாளையம் சுப்பையா நகர் சந்திப்பில் முடிவடைந்தது. இந்திய கம்யூ., மூத்த உறுப்பினர் மாசிலாமணி சிறப்புரையாற்றி நடைபயணத்தை முடித்து வைத்தார்.
இதில் குடியிருப்புபாளையம் - ஆதிங்கப்பட்டு, பின்னாட்சிக்குப்பம் சாலையை புதுப்பித்திட வேண்டும். அனைத்து பகுதி சுடுகாட்டிலும் தகனமேடை, புதிய குடியிருப்பு பகுதிகளில் மின் விளக்கு அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தப்பட்டது.
இதில் ஏம்பலம் தொகுதி துணை செயலாளர் பக்தவச்சலம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்தவல்லி, நாராயணசாமி, ஆகாஷ், ஆறுமுகம், நடேசன், மாயவன், முருகன், அமுல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.