டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். அன்பழகன் வரவேற்றார். மாநில ஆலோசகர் சரவணன், மாநில பொருளாளர் பாலமுருகன், துணை செயலாளர் ரூபன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். இதில், வரும் 28ம் தேதி நடக்கும் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, நிர்வாகிகள் அன்பழகன், ராஜீ, அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முருகவேல் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement