உலக ஹாக்கி: இந்தியா கோல் மழை... * தென் ஆப்ரிக்க பெண்கள் அணியை வீழ்த்தியது
ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய பெண்கள் அணி 6-1 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. உலகத் தரவரிசையில் 'நம்பர்-9' ஆக உள்ள இந்திய பெண்கள் அணி, 'டி' பிரிவில் இங்கிலாந்து, சீனா, தென் ஆப்ரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் 'டிரா' செய்த இந்தியா, நேற்று தனது இரண்டாவது போட்டியில், 18வது இடத்திலுள்ள தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது.
போட்டி துவங்கியது முதல் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 11 வது நிமிடம் சுனேலிதா முதல் கோல் அடித்தார். தொடர்ந்து நவ்னீத் கவுர் (17), சுஷிலா சானு (25), கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
மீண்டும் போட்டி துவங்கியதும் தீபிகா (38), லால்ரெம்சியாமி (44) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் சுனேலிதா, இரண்டாவது கோல் அடித்தார். தென் ஆப்ரிக்காவின் டி வால் காய்லா (55) ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
* 'டி' பிரிவில் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 2-4 என சீனாவிடம் வீழ்ந்தது. மற்றொரு போட்டியில் ('சி'), அயர்லாந்து அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது.
இந்தியாவை சமாளிக்குமா பாக்.,
உலக கோப்பை ஹாக்கி ஆண்கள் பிரிவில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து (6 புள்ளி) அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா, 2 போட்டியில் 3 புள்ளியுடன், 2வது இடத்தில் உள்ளது. வேல்ஸ் (1), பாகிஸ்தான் (1) 3, 4வது இடத்தில் உள்ளன.
இன்றைய கடைசி லீக் சுற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. இதில், இந்தியா வென்றால் மட்டுமே அரையிறுதி செல்வதற்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியும். சமீபத்திய புரோ லீக் தொடரில் இந்திய அணி இருமுறை பாகிஸ்தானை வீழ்த்தியதால், நம்பிக்கையுடன் களமிறங்கலாம்.
ஜெர்மனி அபாரம்
உலக கோப்பை ஹாக்கி ஆண்கள் பிரிவில் ('பி') நேற்று ஜெர்மனி, 1-0 என பெல்ஜித்தை சாய்த்தது. பிரான்ஸ், மலேசியா மோதிய போட்டி 3-3 என 'டிரா' ஆனது. 2 வெற்றியுடன் 6 புள்ளி பெற்ற ஜெர்மனி, அரையிறுதி செல்வதற்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு