கோவை மூன்றாவது வெற்றி * சேப்பாக்கம் அணி ஏமாற்றம்
சென்னை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில், கோவை அணி 5 விக்கெட்டில் சேப்பாக்கம் அணியை வீழ்த்தியது.
டி.என்.பி.எல்., இரண்டாவது கட்ட போட்டிகள், சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கின. இதில் சேப்பாக்கம்-கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சேப்பாக்கம் அணிக்கு மோகித் ஹரிஹரன் (13), கேப்டன் ஜெகதீசன் (6) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. பின் இணைந்த ராம் அர்விந்த், சுவப்னில் சிங் ஜோடி அணியை மீட்டது. அர்விந்த், 28 பந்தில் அரைசதம் விளாசினார். பின் ஆகாஷ் (10) ஓவரில், அர்விந்த் 2 சிக்சர் அடிக்க, சேப்பாக்கம் அணி 10 ஓவரில் 100/3 ரன் எடுத்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, அர்விந்த் (63) அவுட்டானார். அஷ்வந்த் (5), பிரசாத் (12) ரன் மட்டும் எடுத்தனர். சுவப்னில் (20), தினேஷ் ராஜ் (32) சற்று உதவினர். சேப்பாக்கம் அணி, 19.3 ஓவரில் 167 ரன்னில் ஆல் அவுட்டானது. கோவை சார்பில் அம்ப்ரிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
கோவை அணிக்கு ராதாகிருஷ்ணன் (38), சுரேஷ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது, பாலசுப்ரமணியம் சச்சின் (37) அவுட்டானார். சுரேஷ் 40 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஷாருக்கான் (25) கைகொடுக்க, கோவை அணி 18.5 ஓவரில் 171/5 ரன் எடுத்து, இத்தொடரில் 3வது வெற்றி பெற்றது.
மேலும்
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை