நடவுத்துவரை திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

கிருஷ்ணராயபுரம்,:கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மல்லிகா வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காலநிலைக்கேற்ப தாங்கி வளரக்கூடிய நடவுத்துவரை திட்டம் மானிய விலையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், துவரை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குழித்தட்டு முறையில் துவரை விதைகள் வளர்க்கப்பட்டு பின்னர் வயலில் நடவு செய்யப்படும்.
மேலும், குழித்தட்டுகள் வாங்குதல், உழவு மானியம், நடவு கூலி, டி.ஏ.பி., தெளிப்பு, நுணி கிள்ளுதல் ஆகியவற்றிற்கு, 50 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம், கரூர் மாவட்டத்தில் தாந்தோணி, குளித்தலை, தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement