போலி பட்டாவை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு
குளித்தலை:குளித்தலை
அடுத்த வயலுார் பஞ்., நடுப்பட்டி கிராம மக்கள், ஆர்.டி.ஓ.,
சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்
கூறியிருப்பதாவது:
குளித்தலை அடுத்த வயலுார் பஞ்., நடுப்பட்டி
கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்புகளுக்கு நடுவே, கடந்த, 2015ல் சிமென்ட் சாலை
அமைக்கப்பட்டது. சாலை அருகிலுள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை, கிராம
மக்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், பொதுமக்கள்
பயன்பாட்டில் இருந்து வரும் சிமென்ட் சாலை மற்றும் நத்தம் புறம்போக்கு
இடத்தை, அதே ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 'எங்களுக்கு சொந்தமான
இடம்; யாரு இந்த சிமென்ட் சாலை மற்றும் காலிமனையை பயன்படுத்தக்
கூடாது' எனக்கூறி, மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
பொதுமக்கள்
பயன்பாட்டில் இருந்து வந்த நத்தம் புறம்போக்கு இடத்திற்கு
வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து மீண்டும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு