அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
வருவாய் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், இன்று உங்களை தேடி உங்கள்
ஊரில் திட்ட முகாம், மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில்
நடக்கிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வருவாய்
வட்டத்திற்குட்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி,
பள்ளப்பட்டி ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், 'உங்களை
தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் புதன்கிழமை நடக்கிறது. இதில்,
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சின்னதாராபுரம் ஆகிய குறுவட்ட
வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி
வரை பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது.
மேலும், மாலை,
4:00 முதல், 6:00 மணி வரை அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில், கோரிக்கை மனுக்கள் பெறும்
நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின்
கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என, கலெக்டர்
முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு