புத்தேரி விநாயகர் கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை
திட்டக்குடி, ஆக. 21–
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், செல்வ விநாயகர் கோவில் திருப்பணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, செல்வ விநாயகர் கோவில் திருப்பணிக்கு கணபதி ேஹாமம், வாஸ்து ேஹாமம், வாஸ்து தோஷம் நீங்க நவகிரக சாந்தி, மகாலட்சுமி ேஹாமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமனோர் பங்கேற்றனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
-
மனைவியை தாக்கிய புகாரில் கணவர் உள்பட மூவர் மீது வழக்கு
-
விபத்தில் சிக்கிய கல்லுாரி மாணவரை காப்பாற்றாத லாரி டிரைவர், ஓனர் கைது
-
'மாநகராட்சியில் 1 மாதத்துக்கு 700 நாய்களுக்கு கருத்தடை'
-
பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
-
மண்டல செஸ் போட்டியில் அரசு பாலிடெக்னிக் 2ம் இடம்
Advertisement
Advertisement