11 மதுபான தடை நீக்க விவகாரம்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்
கோவை: மதுபானங்கள் மீது தடை விதித்து பின் உத்தரவு திரும்ப பெற்ற விவகாரத் தில், பல்வேறு கேள்விகள் எழுவதால், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசா ரணை நடத்த வேண்டுமென, பொது சுகாதாரத்துறை முன் னாள் இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.
'என்ரிக்கா என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலையில், சமீபத்தில் ஆய்வு செய்த, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள், 11 வகையான மதுபானங்களை தடை செய்த னர். பின்னர் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
இதில், சேவை குறைபாட்டை மேம்படுத்துவதாக அந்நிறுவனம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், தடை நீக்கப் பட்டதாக தெரிவித்துள்ளது.
செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,ஆய்வு முடிவுகள் வெளியிடாததோடு, அடுத்தகட்டபரிசோதனைக்கும் உட்படுத்தாமலே, தடை நீக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மது விற்பனை நடக்கிறது. மதுபானங்கள் உணவு பட்டியலில் இருப்பதால், அவற்றின் தரம் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும்தர நிர்ணய ஆணையம், 2011ல் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதுவரை மதுபான ஆலைகளில் நடத்திய சோதனை விபரங்கள், பரிசோதனைக்கு அனுப்பிய மாதிரிகள், அதன் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும்.
மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில், தரமற்ற மருந்துகள் ஆய்வு செய்து அவற்றை தடை செய்வதோடு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுகிறது. இதேபோல, உணவு பாதுகாப்பு துறையும் மது வகைகளை ஆய்வுசெய்து, தரமற்றதை தடை செய்ய வேண்டும்.
த.வெ.க., அரசு போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி வருகிறது. 11 மதுபான வகைகளுக்கும் எதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது, பின் உத்தரவு திரும்ப பெற்றதன் பின்னணி என்ன என்பது குறித்து, நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
ஜி எச் ல சின்னதா நடக்கும் கூத்து. இங்கே பெரிசா நடந்து இருக்கு. கேட் கீப்பர் உள்ளே போகணும்ங்குறவுங்களை
ரெண்டு கைகளையும் நீட்டி தடுத்துப்புடுவார். ஒரு 5 அல்லது 10 நிமிஷம் வெயிட் பண்ணி ஒரு 20 ரூவா கையில் வைத்து வச்சிக்கோங்கன்னு சொன்னப்பறம் அவரை மட்டும் உள்ளே அனுப்புவார். அதே கதைதான் இதுவும். தடை பண்ணியது சரிதான் என்றால் ரெட்டிகாரு குறைபாடுகளை விரைந்து சரி பண்ணிப்புட்டார்? குறைபாடு= பணம் ஊழல் ஒழிப்பு = ஊழல் அமோக வளர்ப்பு.
அதுதான் இன்றைய டீ கடை பெஞ்சில் 52 சதவிகித கமிஷன் பேசி தடை நீக்கம் செய்ய பட்டதாக வந்து விட்டதே. பெயர் கூட விஷ்ணு ரெட்டி என்று வந்ததே
ஆக அரவிந்த் கெஜ்ரிவால் மாதிரி மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது விஜயின் டிவிக்கிற கட்சி சிபிஐ விசாரிக்க வேண்டும்
வரிப்பணத்தில் கருணாநிதிக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கடலில் பேனா சிலை. இதெல்லாம் சரியா?
DPH முன்னாள் இயக்குனராகவும் உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக இருந்த மதிப்புக்குரிய குழந்தைசாமி அவர்கள் ஒரு நேர்மையான அதிகாரி மட்டுமல்லாமல் தன் துறையில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு திறம்பட கையாண்டவர். கலப்பட தொழிலில் ஈடுபட்டு குடியர்களின் உயிரோடு விளையாடும் மதுபானங்களை அவர் சொல்வதை கேட்டு தடை செய்வதுடன் இந்த கம்பெனிகளை பிளாக் லிஸ்ட் செய்யவேண்டும் . FSSAI யினால் தடைசெய்யப்பட்ட மது வகைகளை தயாரிக்கும் கம்பனிகளின் மீதான தடையை 12 மணி நேரத்துக்குள் வாபஸ் பெற்றது இந்த அரசாங்கத்தின் நேர்மையை பறைசாற்றுகிறது . பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது . இங்கு யாருமே யோக்கியர்கள் இல்லை என நம்ப தோணுகிறது .மேலும்
-
10 ஆண்டுகளில் முதல் முறை; 10 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி
-
நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில்51 பேர் பலி
-
வயசு வெறும் நம்பர் தான்; உலக மூத்த குடிமக்கள் தினத்தில் மனம் திறந்த மூத்த குடிமக்கள்!
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர்களை சாலையில் தரையிறக்கி ஒத்திகை
-
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச போக்குவரத்து கடும் பாதிப்பு
-
தமிழகத்துக்காகவே மேகதாது அணை; ஆசை காட்டுகிறார் கர்நாடக முதல்வர்