மகனுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வ.உ.சி.நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் காசிநாதன்,54; வெல்டர்;  இவரது மனைவி ஜெயந்தி,49; மகன் பிரவீன்,16; பிரவீன் பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். பிரவீன் சரியாக பள்ளிக்கு செல்லாததால் காசிநாதன் கண்டித்தார். இந்நிலையில் சிங்கப்பூர் சென்றிருந்த காசிநாதன் நேற்றுமுன்தினம்  காலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்  மனைவி ஜெயந்தி, மகன் பிரவீன் இருவரும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காசிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஜெயந்தி மற்றும் பிரவீனை தேடிவருகின்றனர்.

Advertisement