சாலையில் குழியால் விபத்து அபாயம்
நாமக்கல்:நாமக்கல்
- திருச்சி சாலையில், 32வது வார்டில் சிவஞானம் தெரு அமைந்துள்ளது.
அங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும், தனியார்
மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளன.
இங்குள்ள கான்கிரீட் சலை நடுவே குழி ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில்
அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் குழியால்
விபத்தில் சிக்கி செல்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர்
மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும்
கண்டுகொள்ளவில்லை. பெரும் விபத்து நடக்கும் முன், அந்த குழியை
கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது. அதேபோல், அந்த குழிக்கு அருகிலேயே மக்களுக்கு
பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றின் அடி பைப்புகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.