ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவர்கள் டெக்னோத்லான் போட்டியில் சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் கிரிதார், கவின் ஆகியோர் டெக்னோத்லான் 2026 போட்டியில் அகில இந்திய அளவில் 28வது இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

ஐ.ஐ.டி., குவஹாத்தி மாணவர் அமைப்பினர் ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச அளவிலான பள்ளி மாணவர் அறிவுத்திறன் டெக்னோத்லான் – 2026 போட்டி, இந்தியாவின் 1,550 மையங்களில் நடந்தது. 23வது டெக்னோத்லான் போட்டியில் 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்றனர். 1,550க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இப்போட்டி, மாணவர்களின் மனப்பாடத்திறன், தர்க்க சிந்தனை, பகுத்தறிவு, பகுப்பாய்வு திறன், படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்தது.

இந்தபோட்டியில், அகில இந்திய அளவில் 28வது இடத்தை ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவர்கள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவர்கள் கிரிதார் மற்றும் கவின் ஆகியோரை, ஆதித்யா பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி  அனுதா பூனமல்லி ஆகியோர் வாழ்த்தினர்.

மாணவர்களின் சாதனையை நிறுவனர் ஆனந்தன் சால்வை அணிவித்து பாராட்டினார். மாணவர்களின் சாதனைக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் ஆதித்யா வித்ாயஷரம் கல்வி குழுமத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement