சென்னைக்கு வயது 387; வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சி; ஸ்டாலின் பெருமிதம்

2

சென்னை: ''சென்னைக்கு வயது 387; எம்எல்ஏ, துணை முதல்வர், முதல்வர் என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சி'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387; 101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் திமுகவின் சாதனைகள் இருக்கும்.

திமுகவின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்; மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பஸ் முனையங்கள், மெட்ரோ ரயில், ஐடி பார்க், FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை, நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டு காலச் சென்னை வரலாற்றை ரசித்து, ரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.

எம்எல்ஏவாக, துணை முதல்வராக, முதல்வராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்; சென்னை வாழ்க. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement