சிறுமியுடனான படத்தை ‘இன்ஸ்டா’வில் பகிர்ந்த சிறுவன் ‘போக்சோ’வில் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த 17 வயது சிறுவனை ‘போக்சோ’ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், மற்றொரு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி சிறுவன் சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிறுவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தந்தை இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல: பிரிவுபசார விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு
-
எண்ணெய்வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் மத்திய அரசின் இணைச் செயலாளர் அறிவுரை
-
ஊதிய முரண்பாடு களைய ஆர்ப்பாட்டம்
-
திண்ணையில் திடீரென விழுந்த மின் கம்பம்
-
படிக்க சீட் வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி
-
கண்டவராயன்பட்டியில் கண் சிகிச்சை முகாம்
Advertisement
Advertisement