துாக்குப் போட்டு பெண் தற்கொலை
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே இளம் பெண் துாக்குப் போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 32; கடந்த 4 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சூர்யா, 26; இவர்களுக்கு தேசிகா, 7; என்ற மகளும் தேசிகன், 5; என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் அதே ஊரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து குழந்தைகள் இருவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரிடம் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கிருந்த வேப்ப மரத்தில் சூர்யா சேலையால் துாக்குப் போட்டு இறந்தது தெரியவந்தது.
சூர்யாவின் தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல: பிரிவுபசார விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு
-
எண்ணெய்வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் மத்திய அரசின் இணைச் செயலாளர் அறிவுரை
-
ஊதிய முரண்பாடு களைய ஆர்ப்பாட்டம்
-
திண்ணையில் திடீரென விழுந்த மின் கம்பம்
-
படிக்க சீட் வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி
-
கண்டவராயன்பட்டியில் கண் சிகிச்சை முகாம்