ஸ்ரீசரஸ்வதி வித்யாலயாவில் பல் மருத்துவ முகாம்
சேத்தியாத்தோப்பு, ஆக. 23–சிதம்பரம் சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக் கழக பல் மருத்துவக்கல்லுாரி சார்பில் பல் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரேணுகா கண்ணன் வாய் சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அண்ணாமலை பல்கலைக்கழக பல் மருத்துவக்கல்லுாரி குழுவினர் பள்ளி மாணவ, மாணவிகளின் வாய் மற்றும் பற்களை பரிசோதனை செய்து சொத்தை பற்கள் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.மேலும், பள்ளி குழந்தைகள் அதிகளவில் இனிப்பு எடுத்து கொள்வதால் பற்களுக்கு ஏற்படும் தீமைகள், வாய்களில் கிருமி தொற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கமளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல: பிரிவுபசார விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு
-
எண்ணெய்வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் மத்திய அரசின் இணைச் செயலாளர் அறிவுரை
-
ஊதிய முரண்பாடு களைய ஆர்ப்பாட்டம்
-
திண்ணையில் திடீரென விழுந்த மின் கம்பம்
-
படிக்க சீட் வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி
-
கண்டவராயன்பட்டியில் கண் சிகிச்சை முகாம்
Advertisement
Advertisement