விற்பனை கூடத்தில் ஏல தேதி மாற்றம்
அன்னுார்: அன்னுாரில், வரும் 26ம் தேதிக்கு பதில், 27ம் தேதி ஏலம் நடத்தப்படுகிறது.
அன்னுார் – சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், புதன்தோறும், தேங்காய், தேங்காய் கொப்பரை மற்றும் தேங்காய் தொட்டி ஏல விற்பனை நடக்கிறது. ஓணம் பண்டிகை மற்றும் மிலாது நபி விடுமுறையை முன்னிட்டு, வரும் 26ம் தேதிக்கு பதில், 27ம் தேதி ஏலம் நடக்கவுள்ளது. விவசாயிகள் தேங்காய், கொப்பரை மற்றும் தேங்காய் தொட்டியை, 27ம் தேதி காலை 11:00 மணிக்குள் கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கலாம். இதற்கு பின் கொண்டு வரப்படும் விளைபொருட்கள் விற்பனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விவசாயிகள் வாரந்தோறும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என, கோயம்புத்துார் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement