புகையிலைப்பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் புகையிலை பொருள் விற்ற இருவரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பகுதியில் புகையிலை பொருள் விற்பனை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், நாகமணி, 53, மற்றும் காளியம்மாள், 57, இரு வேறு இடங்களில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் இருப்பது உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, இரு கடைகளிலும் தலா, 500 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement