விருது வழங்கல்

மதுரை: பேனியன் பவுண்டேசன், மதர் குளோப் ரெவலுஷேனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் ஹேண்ட்பால் போட்டிக்கு சேவை செய்த வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. பிரிட்டோ பள்ளி, சி.எஸ்.ஆர்., நிர்மலா பள்ளி, டால்பின் பள்ளி, என்.ஆர்.எம்., பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், குமார், கவுரி, அன்பு, காஞ்சனா, இந்திய வீரர் கபில் கண்ணன் ஆகியோருக்கு போலீஸ் எஸ்.பி., (ஓய்வு) மணிவண்ணன் விருது வழங்கினார். செயலாளர் அன்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

Advertisement