ஸ்ரீவீரனார் கோவிலுக்கு இடவசதி கேட்டு மனு

கள்ளக்குறிச்சி: மேமாளூர் ஸ்ரீவீரனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இடவசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

மேமாளூரில் வசிக்கும் பட்டியலின மக்களின் குலதெய்வமாக ஸ்ரீவீரனார் கோவில் உள்ளது. இங்கு வசிக்கும் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால், பொதுமக்கள் ஒன்றாக கூடி திருவிழா நடத்தவும், பொங்கல் வைக்கவும் போதுமான இடவசதி இல்லை.

எனவே, அதிகாரிகள் கோவில் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதை அகற்றித்தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement