மைய தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி

நீலாங்கரை: சாலை மைய தடுப்பில் மோதிய விபத்தில், 30 வயது வாலிபர் பலியானார்.

திருவான்மியூரைச் சேர்ந்தவர் கார்த்திக் நடராஜ், 30. இவர், பாலவாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி, யமாஹா எம்.டி., பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம், வேம்புலியம்மன் கோவில் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை மைய தடுப்பில் மோதியது. பலத்த காயமடைந்த கார்த்திக் நடராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement