செய்திகள் சில வரிகளில்

ஹாசன் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஹாசன் லோக் ஆயுக்தா எஸ்.பி.,க்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'ஐ.ஏ.எஸ்., அதிகாரி பவுசியா தரணம் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்' என்று பேசிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பா.ஜ., - எம்.எல்.சி., ரவிகுமாருக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

'பினாமி நிறுவனங்கள் மூலம் நைஸ் நிறுவனத்தை, முதல்வர் சிவகுமார் வாங்க உள்ளார். இதற்கான ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிடுவேன்' என்று, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

ரவுடி பிக்லு சிவா கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை எதிர்த்து, அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிடதி டவுன்ஷிப் பணிக்காக நிலம் அளக்க சென்ற அரசு ஊழியர்கள் மீது துடைப்பத்தால் தாக்கியதாக, விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisement