மேல்சபை துளிகள்
* சலீமுக்கு வந்த கோபம்
அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்யக்கோரி பா.ஜ.,வினர் நேற்று விதான் சவுதாவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மேல்சபைக்கு பா.ஜ., உறுப்பினர்களால், சரியான நேரத்திற்கு வரமுடியாமல் போனது. இது, மேல்சபை தலைவர் சலீம் அகமதுவை கோபம் அடைய செய்தது.
அவர் கூறுகையில், ''நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் அல்ல. பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டத்தால் கடந்த ஆறு நாட்களாக சபை சீர்குலைந்தது. இது குறித்து நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்,'' என கோபமாக பேசினார்.
* அமைச்சர்களுக்கு 'டோஸ்'
மேல்சபையில் அமைச்சர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. இது குறித்து, மேல்சபை தலைவர் சலீம் அகமது கூறுகையில், ''அமைச்சர்கள் சபைக்கு வந்து காத்திருக்க வேண்டும். அமைச்சர்களுக்காக சபை காத்திருக்காது. குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே அமைச்சர்கள் வர வேண்டும்,'' என எச்சரித்தார்.
* 2 மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளிக்கு மத்தியில், கர்நாடக நகராட்சி திருத்த மசோதா - 2026ஐ அமைச்சர் யதீந்திராவும், கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமை, மேலாண்மை மசோதா - 2026ஐ அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவும் முன்மொழிந்தனர். இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஆதரவு வாக்குகள் அதிகம் பெற்றதால் மசோதா நிறைவேற்றப்படுவதாக மேல்சபை தலைவர் சலீம் அகமது அறிவித்தார்.
***
மேலும்
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி 'என்கவுன்டர்!' பிரேத பரிசோதனையில் வெளியானது அதிர்ச்சி தகவல்
-
விருதையில் நலிவடைந்த செராமிக் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா: த.வெ.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
-
பாரதிதாசன் இலக்கிய மன்றம் கட்டுரைப்போட்டி அறிவிப்பு
-
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
-
கார் கவிழ்ந்து கேரள தம்பதி காயம்
-
4ம் நாளாக போராட்டம்