சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சியினர் போராட்டம் 2 நாட்களுக்கு முன்பே சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு
பெங்களூரு: அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பே சட்டசபை கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 13ம் தேதி துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபையை சுமுகமாக நடத்த முடியவில்லை.
மாநிலத்தில் நிலவும் வறட்சி, பிடதி டவுன்ஷிப் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்னைகள் பற்றி விவாதிக்க ஒத்துழைப்பு தரும்படி, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல், அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என்று கூறினர்.
இந்நிலையில் நேற்று காலையில் சுதந்திர பூங்காவில் இருந்து , விதான் சவுதா நோக்கி, எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் பேரணி சென்றனர். விகாஸ் சவுதா அருகே வந்த போது, சாலையில் இருப்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்தனர்.
தடுப்புகள் மீது ஏற முயன்றதால், அசோக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பின், சட்டசபைக்கு சென்றதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த சட்டசபை கூட் டத்தொடரில் முதன்முறையாக இருக்கையை விட்டு எழுந்து வந்து, சபாநாயகர் இருக்கை முன்பு போராட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர்.
14 மசோதாக்கள் மதிய உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்ட, சட்டசபை மீண்டு ம் கூடியதும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சட்டசபையை காலவரையின்றி, சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் ஒத்திவைத்தார். இதனால் 2 நாட்களுக்கு முன்பே கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
மொத்தம் 8 நாட்கள் மட்டுமே நடந்த சட்டசபையில், எதிர்க்கட்சிகள் போராட்டத்திற்கு மத்தியில் கேள்வி, பதில் விவாதம் மட்டுமே நடந்தது. முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கவில்லை.
கர்நாடக சரக்கு மற்றும் சேவை வரி திருத்தம்; கர்நாடக தொழில்கள் திருத்தம்; கர்நாடக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திருத்தம்; கர்நாடக அரசு பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தம்; பெங்களூரு பெருநகர நில போக்குவரத்து ஆணைய திருத்தம் உட்பட 14 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
கவர்னரிடம் புகார் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நாகேந்திராவை அ மைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று இரவு புகார் செய் தனர்.
இதற்காக விதான் சவுதாவில் இருந்து லோக் பவன் வரை நடந்தே சென்றனர்.
நாகேந்திராவி டம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, கவர்னருக்கு சி.பி.ஐ., கடிதம் எழுதி இருந்தது.
இந்த கடிதத்தை அமைச்சரவையின் முன்பு விவாதித்து முடிவு எடுக்கும்படி, அரசுக்கு, கவர்னர் அனுப்பியுள்ளார். மேலும் நாகே ந்திரா மீது நடவடிக்கை எடுக்க அனுமதிப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்தையும் கவர்னர் கேட்கிறார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யாவிடம் விசாரணை நடத்த லோக் ஆயுக்தா தன்னிடம் கேட்ட அனுமதி குறித்தும், அமைச்சரவையில் முடிவு செய்யும்படி அரசை, கவர்னர் அலுவலகம் கேட்டுள்ளது.
நா கேந்திரா குறித்து அமைச்சர வையில் முடிவு எடுக்க கூறி இருப்பதன் மூ லம், அரசுக்கு, கவர் னர் 'செக்' வைத்து உள்ளார்.