பல்கலை ஓய்வூதியர்கள் 4ம் நாளாக போராட்டம்
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலை ஓய்வூதியர்கள் நேற்று 4ம் நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்தும், நிலுவை தொகையை உடன் வழங்க வலியுறுத்தி ் ஓய்வூதியர்கள் கடந்த 19 ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி 4ம் நாளான நேற்று கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலக வாயிலில் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement